(திருநெல்வேலி) தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள திருநெல்வேலி மாநகராட்சி
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நெல்லை என்று சுருக்கமாக அழைக்கப்படும்
இந்த மாநகராட்சி 55 வார்டுகளைக் கொண்டது.
4 லட்சத்து 11 ஆயிரத்து 298 பேர் வசிக்கும் திருநெல்வேலி மாநகராட்சியில் ஆண்களை விட பெண்கள் அதிகம். இதன் இரட்டை நகரமான பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் நிறைந்த நகரம் இது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட திருநெல்வேலி மாநகராட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என நடுத்தர மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர். தமிழகத்தின் பிற நகரங்களுக்குச் செல்ல ரயில் மற்றும் பேருந்து வசதி சிறப்பாக உள்ளது. எந்தவொரு தொழிற்சாலைகளும் இல்லாததால் வேலைவாய்ப்புகள் அரிதாக இருப்பதே பெருங்குறையாக உள்ளது. நான்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்றவை செயல்பாட்டுக்கு வரும் தருணத்தில் திருநெல்வேலி மாநகராட்சி மிகச் சிறந்த வளர்ச்சி பெறும் என்கின்றனர் மக்கள்.

No comments:
Post a Comment